இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமித்ஷா “கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி விதிகளை மீறி செயல்பட்டது. தவறான வாக்குறுதிகளை அளித்தது. ஆனாலும், மக்கள் தோல்வியை கொடுத்தனர். ஆனாலும், காங்கிரஸ் கட்சி தோல்வியை கொண்டாடி வருகிறது. சாதி, மத அடிப்படையில் வாக்குகளைப் பெற காங்கிரஸ் கட்சி முயற்சித்தது. பாஜக மீது நம்பிக்கை வைத்துதான், கர்நாடக மக்கள் அதிக இடங்களை அளித்தனர்.
எனவே, ஆட்சி அமைக்க பாஜகவிற்கே முதல் உரிமை உள்ளது. காங்கிரஸ் கட்சிகள் ஏராளமான ஊழல் நடந்தது. அதனால்தான் அக்கட்சிக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. மஜத-காங்கிரஸ் கூட்டணியை கர்நாடக மக்கள் விரும்பவில்லை. அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என அவர் கூறினார்.