வேற்றுகிரவாசிகளின் கால்தடயங்கள்: பயந்து வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் கிராமம்!!

செவ்வாய், 11 ஜூலை 2017 (18:36 IST)
கர்நாடக மாநிலம் அன்டுர் கிராமத்தில் மக்கள் வேற்றுகிரவாசிகளின் கால்தடங்களுக்கு பயந்து விட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.


 
 
அந்த கிராமத்தில் உள்ள திறந்தவெளியில், சுமார் 20-30 பெரிய கால் தடங்கள் இருந்துள்ளது. அந்த கால்தடங்கள் எந்த விலங்கின் கால் தடத்தோடும் ஒத்துப்போகவில்லை, இது போன்று இதுவரை கண்டதில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
மேலும், ஏதோ ஒரு உயிரினம் மூச்சு விடுவது போன்ற மிகப் பயங்கர சத்தத்தைக் கேட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். இது வேற்றுகிரவாசிகளின் கால்தடயங்களாக இருக்ககூடும் என எண்ணி மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
 
கிராமத்தினரின் அச்சத்தைப் போக்க, அப்பகுதியில் வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்