1993 ம் ஆண்டு ராஜஸ்தானில் ரயில்களில் குண்டு வெடிப்பு நடத்திய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கைதானவர் டாக்டர் ஜலிஸ் அன்சாரி. தொடர்ந்த விசாரணையில் நாடு முழுவதும் நடந்த பல்வேறு வெடிகுண்டு சம்பவங்களில் இவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இவரை அன்றைய ஊடகங்களும், மக்களும் டாக்டர் வெடிகுண்டு என சித்தரித்தனர். அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு 21 நாட்கள் பரோலில் வெளியே வந்த ஜலீஸ் அன்சாரி மீண்டும் சிறைச்சாலை திரும்பவில்லை. இதனால் போலீஸார அவரது வீட்டிற்கு சென்று விசாரித்தபோது ஹன்சாரி சில நாட்களுக்கு முன்பே கிளம்பிவிட்டதாகவும், அவர் எங்கே போனார் என தங்களுக்கு தெரியாது எனவும் கூறியுள்ளனர். மாயமான அன்சாரியை தேடும் பணியில் மும்பை போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.