அரசியலில் ஹர்பஜன் சிங் - ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாப் எம்.பி. ஆக வாய்ப்பு?

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (14:04 IST)
ஹர்பஜன் சிங்குக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுக்க முதல்வர் பகவந்த்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 59 தொகுதிகளில் வென்றால் பெரும்பான்மை என்ற நிலையில் 92 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து பஞ்சாப் ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளரான பகவந்த் மான் நேற்று பதவியேற்றுக்கொண்டார். 
 
இந்நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றியதால் அம்மாநிலத்தில் இருந்து அந்த கட்சிக்கு 6 மேல் சபை எம்.பி. உறுப்பினர்கள் புதிதாக கிடைக்கிறார்கள். பஞ்சாப்பில் அடுத்த மாதம் 5 மேல் சபை உறுப்பினர்களின் எம்.பி. பதவி காலியாகிறது. 
 
இதையடுத்து காலியாக உள்ள அந்த இடங்களை நிரப்ப ஆளும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுக்க முதல்வர் பகவந்த்மான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்