ரயில் டிக்கெட் பரிசோதகரின் ஆடையில் கேமரா பொறுத்தும் திட்டம்

Webdunia
சனி, 6 மே 2023 (16:18 IST)
ரயில் டிக்கெட் பரிசோதகரின் ஆடையில் கேமரா பொறுத்தும் திட்டத்தை மத்திய ரயில்வேயில்  முதன்முதலாக அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் மத்திய ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட ரயிலில் பயணித்த பெண் பயணி ஒருவரிடம் டிக்கெட் பரிசோதகர் தவறான நடந்துகொள்ள முயன்றதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவர் இடை நீக்கம் செய்யப்பட்டது.

இதுபோல் ரயில்களில் பயணிகள் அநாகரிகமாக நடந்துகொள்ளுவதும் நடந்து வருகிறது. இந்த நிலையில், ரயில்களில்  இம்மாதிரி நடப்பதைத் தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, டிக்கெட் பரிசோதகரின் ஆடையில் கேமரா ஒன்றைப் பொருத்தும் திட்டம் மும்பையில்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய ரயில்வே சார்பில் ஆடை கேமராக்கள் ரயில்வே கோட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்