ஹைதராபாத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் பெற்றோருடன் சில முறை திருப்பதிக்கு வந்திருந்த நிலையில் மீண்டும் திருப்பதி செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதை பெற்றோரிடம் தெரிவித்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதை அடுத்து கடந்த நான்காம் தேதி டியூஷனுக்கு செல்வதாக கூறி பெற்றோருக்கு தெரியாமல் திருப்பதிக்கு ரயில் ஏறிவிட்டார்.
இதனை அடுத்து போலீசார் அந்த சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து அந்த சிறுவன் கூறிய போது பெற்றோரிடம் 15 முறை இங்கு வந்துள்ளேன், மீண்டும் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்ததால் ரயில் ஏறி விட்டேன் என்று கூறியுள்ளார்.
தான் சேமித்து வைத்திருந்த ஆயிர ரூபாய் பணத்துடன் ஏழுமலையானை தரிசிக்க வீட்டிற்கு தெரியாமல் திருப்பதிக்கு சென்ற எட்டாம் வகுப்பு மாணவன், அதன் பின் தனியாக வந்ததை நினைத்து வருந்திய நிலையில் தான் போலீசார் அவரை கண்டுபிடித்து பெற்றவரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.