இந்தியாவில் 610 கட்சிகளுக்கு ஜீரோ: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (08:31 IST)
உலகிலேயே அதிக அரசியல் கட்சிகள் உள்ள நாடு அனேகமாக இந்தியாவாகத்தான் இருக்கும். தேர்தல் ஆணையத்தில் மட்டும் இதுவரை 2301 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒருசில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டன. 
 
இந்த நிலையில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் 610 கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத கட்சிகளாக இருப்பது தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி தெரிய வந்துள்ளது. இந்த 610 கட்சிகளில் 80 கட்சிகள் ஒரு சதவீதம் அல்லது அதற்கு குறைவான வாக்கு சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளது. அதேபோல் 530 கட்சிகள் ஒரு சதவிகிதத்தில் இருந்து ஐந்து சதவிகிதம் வரையிலான வாக்குகளை பெற்றுள்ளன
 
தமிழத்தில் ஒரு தொகுதியை கூட பெறாத கட்சிகளாக மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், தேமுதிக, பாமக ஆகியவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்