8 நாட்களில் 6 நாட்கள் லீவ்: கொடுத்த வச்ச வங்கி ஊழியர்கள்!
வியாழன், 23 டிசம்பர் 2021 (13:27 IST)
டிசம்பர் மாதம் முடிய இன்றும் 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
டிசம்பர் மாதம் வங்கிகளுக்கு 16 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்னும் டிசம்பர் மாதம் முடிய 8 நாட்களே உள்ள நிலையில் அதில் 6 நாட்கள் வங்கிகள் விடுமுறை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தாது என்பது கூடுதல் தகவல்.