கேரளாவில் பெய்த பலத்த மழைக்கு 45 பேர் பலி

சனி, 16 ஜூன் 2018 (11:45 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் 45 பேர் உயிரிழந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதற்கு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதே காரணம்.
 
இந்த பலந்த மழையால் அங்குள்ள பகுதிகளில் வீடு இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும், மின்சாரம் தாக்கியும் இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கும். மேலும், இடிபாடிகளில் சிக்குயவர்களை காப்பாற்ற மீட்புக் படையினர் கோழிக்கோடு சென்றுள்ளனர்.
 
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியும், அடிப்படை வசதி செய்யவும், முகாம்கள் அமைக்கவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலா பார்வையிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்