மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் தீவிரமாக போராடி வரும் நிலையில் சற்று முன்னர் இந்தியா கேட் பகுதியில் கார்த்திக் மகெர் என்ற இளைஞர் திடீரென தீக்குளித்தார். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவர் மேலிருந்த தீயை அணைத்தனர். தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடலில் 90% தீ காயங்கள் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.