ராஜஸ்தானில் 22 புதிய அமைச்சர்கள்: 17பேர் முதல் முறை அமைச்சர்களாக பதவியேற்பு..!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (08:28 IST)
ராஜஸ்தானில் 22 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ள நிலையில் அதில் 17 பேர் முதல் முறையாக அமைச்சர்களாக பதவியேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த ஐந்து மாநில பொதுத் தேர்தலில் ராஜஸ்தான் உள்பட 3 மாநிலங்களில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

இந்த நிலையில் ராஜஸ்தானில் தற்போது 22 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்றுள்ளனர். அவர்களில் 17 பேர் முதல் முறையாக அமைச்சர்களாக பதவியேற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவி பிரமாணம் செய்து வைக்க 12 பேர் கேபினட் அமைச்சர்களாகவும் 5 பேர்  தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 5 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர்.

ராஜஸ்தானில் புதியவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்