கைலாய யாத்திரை - 1500 நபர்களில் 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்பு

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (09:26 IST)
கைலாய யாத்திரைக்கு சென்று நிலச்சரிவில் சிக்கிய 1500 இந்திய பக்தர்களில் 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வரும் நிலையில் இந்த ஆண்டும் வழக்கம்போல் கைலாஷ் யாத்திரைக்கு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என நாடு முழுவதிலும் இருந்து பலர்  சென்றனர்.
கனமழை காரணமாக அப்பகுதிகளின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. இதனால் கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 1500 பக்தர்கள் சிக்கியுள்ளனர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
இவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் 1500 நபர்களில் 143 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் தமிழகத்தை சார்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் விரைவில் தமிழ்நாட்டிற்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ளவர்களை மீட்க மீட்புத் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்