வெள்ளத்தில் தத்தளிக்கும் காசிரங்கா தேசியப் பூங்கா; 140 வன விலங்குகள் பலி

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:16 IST)
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காசிரங்கா தேசிய பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 140 வன விலங்குகள் பலியாகியுள்ளன.


 

 
அசாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவ வீரர்களும் ஈடுப்பட்டுள்ளனர்.
 
அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. யானைகள், முள்ளம்பன்றி உள்பட 140 வன விலங்குகள் உயிரிழந்ததாக காசிரங்கா வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளித்தில் சிக்கியுள்ள விலங்குகள் தண்ணீரில் மூழ்கி இறந்து போக வாய்ப்புள்ளது. 
 
இல்லை விலங்குகள் தன்னீரில் நீந்தியபடி அருகாமையில் உள்ள ஊர்களுக்குள் புகுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்