டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா மீதும் அமலாக்கத் துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள கவிதாவின் வீட்டில் கடந்த மாதம் 15ஆம் தேதி சோதனை நடத்திய அமலாக்கத்துறை, அவரை கைது செய்தது.
இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன், அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.