இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி தேசிய தேர்வு முகமை நீட் தேர்வு முடிவுகள் தேர்வு மையம் வாரியாக வெளியிட்டதில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மற்றும் அதற்கு குறைவான நெகட்டிவ் மதிப்பெண்களை பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் மேலும் 9,400 பேர் மைனஸ் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மிகவும் குறைந்தபட்சமாக ஒரு மாணவர் மைனஸ் 180 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான பதிலுக்கு நான்கு மதிப்பெண்கள், அதே நேரம் தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு எழுதிய 11 ஆயிரம் மாணவர்கள் ஒரு மதிப்பெண் கூட எடுக்காமல் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.