து‌ணிகளை‌த் துவை‌க்கு‌ம் போது

புதன், 24 மார்ச் 2010 (14:29 IST)
வெ‌ள்ளை‌த் து‌ணிகளை எ‌ப்போது‌ம் த‌னியாக ஊற வை‌த்து த‌னியாக‌த் துவை‌த்து, த‌னியாக உல‌‌ர்‌த்துவது, அத‌ன் ‌நிற‌ம் ம‌ங்காம‌ல் கா‌க்க‌ச் செ‌ய்யு‌ம் வ‌ழியாகு‌ம்.

பு‌திய ஆடைகளை‌த் த‌னியாக ஊறவை‌த்து‌த் துவை‌க்கவு‌ம். ‌சில சமய‌ம் ‌சாய‌ம் போகு‌ம் து‌‌ணியாக இரு‌ந்தா‌ல் ம‌ற்ற து‌ணிகளு‌க்கு பா‌தி‌ப்பாகு‌ம்.

ப‌ணிபு‌ரியு‌ம் இட‌ங்க‌ளி‌ல் அ‌ணியு‌ம் ஆடைக‌‌ள் ‌சில சமய‌ங்க‌ளி‌ல் ‌மிகவு‌ம் கறை படி‌ந்து காண‌ப்ப‌ட்டா‌ல், ‌அவ‌ற்றை சோ‌ப்பு‌ப் பவுடருட‌ன் ‌சி‌றிது ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் பவுடரையு‌ம் சே‌ர்‌த்து ஊற‌வி‌ட்டு ‌பிறகு ந‌ன்கு துவை‌த்து‌க் காய‌ வை‌த்தா‌ல் ந‌ல்ல மா‌ற்ற‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

ஜீ‌ன்‌ஸ் து‌ணிகளை அலசு‌ம் கடை‌சி‌த் த‌ண்‌ணீ‌ரி‌ல் ஒரு க‌ப் ‌வி‌னீக‌ர் சே‌ர்‌த்து அல‌சினா‌ல் மெ‌ன்மையாக இரு‌க்கு‌ம்.

மிக‌வு‌ம் கறை படி‌ந்த பெ‌ட்ஷ‌ீ‌‌ட்களை சூடான ‌நீ‌ரி‌ல் சோ‌ப்பு‌ப் பவுட‌ர் போ‌ட்டு, அ‌தி‌ல் ஊற வை‌த்து‌த் துவை‌‌த்தா‌ல் வேலை எ‌ளிதாகு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்