உபயோகமான தக‌வ‌ல்க‌ள்

செவ்வாய், 9 ஜூன் 2009 (16:03 IST)
விலை குறை‌ந்த கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது.

எலுமிச்சம் பழம் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கிப் பிழிந்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து விடுங்கள். தேவையான போது உபயோகித்துக் கொள்ளலாம்.

எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்காமலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து விடுங்கள்.

பழைய சாக்ஸுகளைத் துடைப் பத்தின் கைப்பிடிப் பக்கம் மாட்டிக் கட்டி விட்டால் துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.

உளுந்து நிறைய வாங்கி விட்டீர்களா? அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெயைத் தடவி வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். பூச்சிகள் வராது.

வெப்துனியாவைப் படிக்கவும்