மூங்கிலால் ஆன பொருட்கள் எடை குறைவானவை என்பதால் வெகு எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல இயலும். இடத்தையும் அதிகம் அடைக்காது. அறையின் அமைப்பையும் எளிதில் மாற்றியமைக்கலாம்.
மூங்கிலின் இன்னொரு விசேடத் தன்மை என்னவென்றால் இதில் அலமாரி, சோஃபா போன்ற பெரிய நாற்காலிகளையும் செய்ய முடியும். குழந்தைகளின் தள்ளு வண்டி, மேஜை விளக்கிற்கான அமைப்பு, மெழுகுவத்தி வைக்கும் தாங்கி போன்ற சின்னப் பொருட்களையும் உருவாக்க முடியும்.
மூங்கிலால் உருவான திரை பல வீடுகளிலும், அலுவலகங்களிலும் அழகாகத் தொங்குவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஆகவே, மூங்கில் என்பது கை வினைத் திறனை அழகு பட வெளிப்படுத்தக் கூடிய ஒரு இயற்கைத் தந்த வழியாகும்.