சருமத்தின் மீது கவனம் வேண்டும்
திங்கள், 3 மே 2010 (17:23 IST)
லிப்ஸ்டிக் பென்சில், லிப்ஸ்டிக்கை விட அடர்த்தியான நிறத்தில் இருக்குமாறு வாங்க வேண்டும்.
லிப்ஸ்டிக் போட்டதும், ஒரு டிஸ்யூ பேப்பரில் ஒத்தி எடுக்கவும். கூடுதலான நிறத்தை குறைக்க இது நல்ல முறையாகும்.
கண்களில் போட்ட ஐ ஷேடோ, ஐ லைனர் போன்றவற்றை நீக்குவதற்கு வாசலினை தொட்ட பஞ்சினைப் பயன்படுத்தவும்.
பால் குண்டானில் ஒட்டியிருக்கும் பால் ஏட்டினை வீணாக்காமல் முகத்தில் தடவி வரவும். எளிதானதும், சருமத்திற்கு மிகவும் ஏற்றதாகவும் பால் ஏடு இருக்கும்.
1 தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறில் தேன் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வந்தால் முகம் வழவழுப்பாக மாறும்.
வெயிலில் சருமம் அதிக சூட்டை அடையாமல் தவிர்க்க, அவ்வப்போது, தயிர், பன்னீர், வெள்ளரி விழுது போன்றவற்றைத் தடவி வரலாம்.