பவுண்டேஷனை லேசாக பயன்படுத்துவது நல்லது. அதிகப்படியான பவுன்டேஷன் முகத்தின் கோடுகளை வெளிப்படுத்திக்காட்டும். மேலும் முகத்தில் சுருக்கங்கள் இதன் அதிகப்படியான உபயோகத்தின் பின் விளைவு ஆகும்.
லேசான அல்லது எண்ணெய்ப் பசையை குறைக்கக்கூடிய பவுன்டேஷன் அல்லது ஈரப்பதமான பவுன்டேஷன் சருமத்தை மிருதுவாக்கும்.
பவுடர் பூசும்போது மேலிருந்து கீழ் நோக்கி தடவவும். கீழிருந்து மேலே பூசினால் கண்ணுக்குச் சரியாகத் தெரியாத முடிகள் எழுந்து நின்று முகத்தை அசிங்கமாக காட்டலாம்.
ஐ ஷேடோவை அடிப்படையாக பயன்படுத்துவதால் கண்களுக்கு அதிகப்படியான ஒளி கிடைக்கிறது. பளபளக்கும் வெளிர் நிறங்களை பயன்படுத்தி பாருங்கள். இவை கண் இமைகளுக்கு பளபளப்பைக் கொடுக்கும். உங்கள் கண்களின் ஒளியையும் அதிகரிக்கும்.
முகத்தை என்னதான் மேக்கப் போட்டிருந்தாலும் அழகான புன்னகைதான் மேலும் உங்களை அழகாக்கும் அதை நினைவில் கொள்ளுங்கள்.