ப‌ற்களை பாதுகா‌க்க

வெள்ளி, 19 ஜூன் 2009 (12:45 IST)
பற்கள் பளபளப்பாக இருக்க எலுமிச்சை சாற்றுடன் உப்பு கலந்து பிரஷ் செய்யவும்.

சாப்பி‌ட்ட உணவு, வாயில் சிறிது நேரம் தங்கி விட்டால், துர்நாற்றத்திற்கு காரணமாக அமைகிறது. அதனால் சாப்பிட்டவுடன் வாயை கொ‌ப்ப‌ளி‌ப்பது நல்லது.

காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதைப் போல், இரவு படுக்கும் முன் பல் தேய்ப்பதும் முக்கியம்.

பல் தேய்க்கும் போது பல்லில் மட்டும் கவனம் செலுத்தினால் பத்தாது. ஈறுகள், நாக்கு இவற்றையும் சுத்தம் செய்ய வேண்டும். பல்லை விட இவை மிருதுவானவை என்பதால் பல்லில் காட்டும் வேகத்தை சற்றே குறைத்துக் கொள்வது நல்லது.

பல் தேய்த்த பிறகு மவுத்வாஷால் வாயை கொப்பளிப்பதால் நீண்ட நேரத்திற்கு துர்நாற்றம் வராமல் தடுக்கலாம்.

அஜீரணம், பசி, இவற்றாலும் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம். அதனால் சாப்பாட்டில் கவனம் செலுத்தவும், ஒரே நேரத்தில் ‌நிறைய சாப்பிடாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிய அளவில் சாப்பிடுவது சிறந்தது. சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீராவது குடிக்கவும். இது அஜீரணமும் பசியும் ஏற்படாமல் தடுக்கும்.

அழ‌கிய பு‌ன்னகைதா‌ன் அழகு‌க்கு அழகு சே‌ர்‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்