கேக் வகைகள் செய்யும் முறை
செவ்வாய், 23 டிசம்பர் 2008 (17:05 IST)
வென்னிலா கேக் வென்னில ா கேக ் எளி ய முறையில ் செய் ய இயலும ். சுவையும ் அதிகமா க இருக்கும ். கிறிஸ்மஸ ் அன்ற ு செய ்வதற்காக. தேவையானப் பொருட்கள் முட்டை - 5 மைதா மாவு - 2 கப் சர்க்கர ை - 2 கப் மார்கரின் - 1 கப் வ ெ ன்னிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி தயிர் - 2 தேக்கரண்டி செய்முறை சர்க்கரைய ை மிக்ஸியில ் போட்ட ு தூளா க அரைத்துக ் கொள்ளவும ். அ த்துடன் மார்கரினை கலந்து நன்கு நுரைத்து வரும் வரை கரண்டிய ை வைத்த ு அடித்துக் கொள்ளவும் முட்டைகள ை உடைத்த ு ஊற்ற ி அதையும ் நன்றா க அடித்த ு அத ை, சர்க்கர ை, மார்கரின ் கலவையுடன ் சேர்க்கவும். அதில் தயிர், எசன்ஸ் சேர்த்து கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து சலித்து உருண்டை இல்லாமல் தூளாக வைத்துக் கொள்ளவும். அதில் மைதா மாவையும் ஊற்றி அந்த பாத்திரத்தை தூக்கிப் பிடித்து ஒரே பக்கமாக கலக்கவும். பின் கேக்கிற்கான பரந்த பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் மாவினைக் கொட்டி 35 நிமிடம் வேக விடவும். கேக் நன்கு வெந்ததும் இறக்கி அலங்கரித்து வைக்கவும். அடுத்த பக்கம்... சாக்லேட் கேக்
சாக்லேட் கேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் கேக்கினை கிறிஸ்மஸ் தினத்தன்று செய்து கொடுத்து தேவையானப் பொருட்கள் மைதா - 2 கப் சர்க்கரை - 2 கப் முட்டை - 8 வெண்ணை - 450 கிராம் வென்னிலா பவுடர் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி கருப்பு டேப்லெட் சாக்லேட் - 400 கிராம் செய்முறை சர்க்கரைய ை மிக்ஸியில ் போட்ட ு தூளா க அரைத்துக ் கொள்ளவும ். சர்க்கரைய ை வெண்ணையுடன ் நன்க ு க்ரீம ் போ ல வரும்வர ை கலக்கவும ். சாக்லேட்டு துண்டுகளை சுடு நீரில் போட்டு நன்கு கூழ் போல செய்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை அடித்துக் கலக்கவும். கலக்கிய முட்டையில், வெண்ணை, சர்க்கரை கலவையை கொட்டி நன்கு கலக்கவும். அதில் பேக்கிங் பவுடர், வென்னிலா பவுடர் சேர்த்து மேலும் கலக்கவும். சாக்கலேட் கூழை முட்டை, சர்க்கரை, வெண்ணை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடித்துக் கலக்கவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மைதாவை சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் வெண்ணை தடவி அதில் இந்த மாவு, முட்டை கலவையைக் கொட்டவும். வேண்டுமென்றால் அதன் மீது முந்திரி அல்லது பாதாம் துருவல்களைத் தூவி அலங்கரித்துக் கொள்ளலாம். கேக்கை நன்கு வேக வைக்கவும். சுமார் 35 நிமிடங்கள் வேகவிடவும். கேக் வெந்தவுடன் உங்களுக்குத் தேவையான அளவுகளில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.அசத்துங்கள்....
செயலியில் பார்க்க x