9வது ஆண்டில் தமிழ்.வெப்துனியா.காம்!

சனி, 12 ஏப்ரல் 2008 (20:52 IST)
தமிழ்‌த் திருநாட்டில் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்களிலும், கடல் கடந்து உலகெங்கிலும் பரவிக் கிடக்கும் தமிழர்களிடையே, தமிழ் இனத்தின், மொழியின், பண்பாட்டின், எதிர்ப்பார்பின் அடையாளமாக இணையத்தில் உலாவந்துக் கொண்டிருக்கும் உங்கள் தமிழுலகமான எமது பல்கலைத் தளம், 8 ஆண்டுகளை நிறைசெய்து 9வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

2000வது ஆண்டில் இதே சித்திரைப் பிறப்பின்பொழுது பிறந்த வெப்உலகம்.காம், இந்த 8 ஆண்டுக் காலத்தில் தனது நேர்த்தியான, நேர்மையான பணியின் வாயிலாக உங்களின் அபிமானத்தைப் பெற்று தமிழ் தளங்களுக்கிடையே தனித்த இடத்தைப் பெற்று உயர்ந்து சிறந்து முதன்மைத் தளமாக விளங்குகிறது.

உங்களுடைய எதிர்ப்பார்ப்புகளை நன்குணர்ந்து நாங்கள் நிறைவேற்றிவருகிறோம் என்பதற்கு இது அத்தாட்சியாகும்.

8வது ஆண்டில் எமது இணையத்தளம் ஒரு முக்கிய மாற்றத்தைப் பெற்றது. அதுவரை டைனமிக் எழுத்துருவில் பொருளடக்கதைத் தந்துவந்த எமது தளம், அனைத்து வித கணினி இயக்க வகைகளிலும் தடையின்றி காண உதவிடும் வகையில் யுனிகோடிற்கு மாறியது. இந்த மாற்றத்தோடு, எமது இணையத் தளத்தின் முகவரியும் வெப்உலகம்.காம் என்பதிலிருந்து தமிழ்.வெப்துனியா.காம் என்ற புது முகவரியைப் பெற்றது.

கடந்த 8 ஆண்டுகளாக தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் இணைய பல்கலைத் தளங்களை இயக்கிவரும் எமது வெப்துனியா.காம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்த ஆண்டு, மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், வங்காளி ஆகிய மொழிகளில் மேலும் 5 புதிய பல்கலைத் தளங்களைத் துவக்கியது. தற்பொழுது 9 இந்திய மொழிகளில் பல்கலைத் தளங்களை இயக்கிவரும் ஒரே பெரும் நிறுவனம் என்கிற உன்னத இடத்தை வெப்துனியா நிறுவனம் பெற்றுள்ளது. இவ்வளர்சியின் மூலம் இந்திய மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களது மொழிகளிலேயே அனைத்து செய்திகளையும், தகவல்களையும் அறிந்து கொள்ளும் வசதியை அளித்துள்ளது வெப்துனியா.

11 இந்திய மொழிகளில் மின் அஞ்சல் சேவையை அளித்துவரும் வெப்துனியா.காம், இந்த ஆண்டில் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்தது. தமிழ் மொழி உட்பட 9 இந்திய மொழிகளில் தேடல் (Search) வசதியை ஏற்படுத்தித் தந்தது. மொழிகளிலேயே வாழ்த்து அட்டைகளை தெரிவு செய்து அளித்துவரும் சேவையை அதிகப்படுத்தியது.

webdunia photoWD
“இணையத்தின் தொழில்நுட்ப வசதிகளும், வாய்ப்புக்களும் இந்திய மொழிகளிலேயே இந்திய மக்களுக்கு சென்றடைவைப்பதே வெப்துனியாவின் நோக்கம்” என்ற எமது நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் வினய் சஜ்லானியின் தொலை நோக்கு இன்று முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொருளடக்கத்திலும் தமிழ்.வெப்துனியா.காம் பெருமளவிற்கு விரிவுபடுத்தியுள்ளது. நிதி, வணிகம், பங்குச் சந்தை, புனிதப் பயணம், நம்பினால் நம்புங்கள், ஜோதிடம் ஆகியன அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். நாடும் நடப்பும், விளையாட்டுக் கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் பிரச்சனைகளின் அலசல்களை அதிகரித்துள்ளோம். அவற்றின் மீது உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யும் வசதியையும் உருவாக்கித் தந்துள்ளது வெப்துனியா.காம்.

இது மட்டுமின்றி, பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ், சுதந்திர தினம், குடியரசு தினம், நட்பு தினம், புத்தாண்டு போன்ற முக்கிய தினங்களுக்கும், பண்டிகைகளுக்கும் சிறப்புகளை உருவாக்கியளித்தோம்.

இதுவரையிலான எங்களின் பணி உங்களுக்குத் திருப்தியளித்திருந்தாலும், உங்களுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அளித்துவிட்டதாக நங்கள் நினைக்கவில்லை. இன்னும் அதிகமாக, ஆழமாக மேலும் மேலும் பொருளடகத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு.

அந்த இலக்கை நோக்கி... உங்களது நல்லாதரவுடன் எங்களது பயணம் இடையராது தொடரும். உ‌ங்க‌ள் ‌விரு‌ப்பமே எ‌ங்களு‌க்கு வ‌ழிகா‌ட்டி. ‌நீ‌ங்க‌ள் எ‌ன்ன ‌நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்க‌ள். தவறாது உ‌ங்க‌ள் ஆலோசனையை‌க் கூறு‌ங்க‌ள்.

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்.