தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.644 கோடி!

சனி, 1 மார்ச் 2008 (13:15 IST)
தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.644 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், இத்திட்டம் தற்போதைய நிலையிலேயே கரீப் மற்றும் ரபி பருவங்களிலும் தொடரும் எனக் குறிப்பிட்டார்.

ஐந்து மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில், சோதனை ரீதியாக செயல்படுத்தப்படவுள்ள தட்ப வெப்ப அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கப்படவுள்ளது எ‌‌ன்று‌ம், விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்களைத் தொடர்ந்து வழங்கவுள்ளதாகவு‌ம் அமைச்சர் தெரிவித்தார்.

மேலு‌ம், தேயிலைச் செடிகளை மறுநடவு செய்யவும், புத்துயிரூட்டவும் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சிறப்பு தேயிலை நிதியத்திற்கு ரூ.40 கோடி அளிக்கப்படுகிறது. இதே போன்று ஏலக்காய்க்கு ரூ.10.68 கோடியும், ரப்பர் பயிருக்கு ரூ.19.41 கோடியும், காபி பயிருக்கு ரூ.18 கோடியும் நிதியுதவி அளிக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்