Type 2 நீரிழிவு; பழங்களை சாப்பிட்டார் தீர்வு, ஜூஸ் என்றால் ஆபத்து

சனி, 31 ஆகஸ்ட் 2013 (14:39 IST)
FILE
திராட்சை இனிப்பான பழமென்றாலும், இனிப்பு நீர் ஆபத்தைக் குறைக்க அது உதவுகிறது

பழங்களை தினமும் உண்பதால் டைப் 2 டயபடீஸ் எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

சுமார் இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரியவந்துள்ளது.

பழங்கள் அதிலும் குறிப்பாக, திராட்சை, ஆப்பிள், புளூபெர்ரி போன்றவற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு சர்க்கரை வியாதி வரும் ஆபத்து 25 சதவீதத்தால் குறைகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுடைய தரவுகளிலிருந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்டிராபெர்ரி, மெலன் போன்ற சில பழங்களால், இந்த ஆபத்து பெரிதாகக் குறையவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

FILE


அதேநேரம் பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு டைப் 2 டயபடீஸ் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உடலில் சேருகின்ற இனிப்பு முறையாக பயன்படுத்தப்படுவதிலும், சேமிக்கப்படுவதிலும் கோளாறு ஏற்படுவதால் நீரிழிவு நோய் வருகிறது என்பதே இதற்கு காரணம். பழமாக சாப்பிடும் பொழுது இந்த நிலை இருக்காது.

வெப்துனியாவைப் படிக்கவும்