ஆட்டிசம் நோய்க்கு புதிய மருந்து க‌ண்டு‌பிடி‌ப்பு

புதன், 17 பிப்ரவரி 2010 (12:55 IST)
குழந்தைகளின் மூளையை தாக்‌கி, அவ‌ர்களது இய‌ல்பு வா‌ழ்‌க்கையை கே‌ள்‌வி‌க்கு‌றியா‌க்கு‌ம் நோய் தான் ஆட்டிசம். இந்த நோய் பாதித்த குழந்தைகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டார்கள். அவர்களை கட்டுப்படுத்துவது‌ம் கடினம். இந்த நோயை குணப்படுத்த இப்போது புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இது மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் ஆக்சிடாசின் என்ற ஹார்மோன் அடங்கியது. இவற்றை மூக்கின் வழியாக ஸ்பிரே செய்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு சுவாசிப்பதன் மூலம் ஆக்சிடாசின் ஹார்மோன் மூளைக்கு சென்று ஆட்டிசம் நோயாளிகளின் செயல்பாட்டை அவ்வப்போது கட்டுப்படுத்தும்.

இதன் மூலம் நோயினால் பாதிக்கப்பட்டவர் சாதாரண நிலைக்கு திரும்ப முடியும். எகிப்தில் நடந்த நரம்பியல் மாநாட்டில் இதுகுறித்த ஆய்வு கட்டுரையை விஞ்ஞானி எலிகன் அந்தாரி தாக்கல் செய்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்