மூளை வீக்க நோய்: உத்தரபிரதேசத்தில் மேலும் 4 சிறுவர்கள் பலி!
புதன், 28 அக்டோபர் 2009 (11:24 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் என்சிஃபாலிட்டிஸ் என்றழைக்கப்படும் மூளை வீக்க நோய் தாக்கி நேற்று மட்டும் நான்கு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்நோய்க்கு இதுவரை 441 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசுத் தகவல் தெரிவிக்கிறது.
உத்தரப்பிரதேசத்தின் நெற்களஞ்சியம் என்று பெருமைப் பெற்ற கோரக்பூரில் இரண்டு சிறுவர்களும், சாந்த் கபீர் நகர், மஹராஜ் கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் மேலும் இரண்டு சிறுவர்களும் உயரிழந்துள்ளதாகக் கூறிய அம்மாநில பொது நலத் துறையின் கூடுதல் இயக்குனர் எல்.பி. ரவாத் கூறியுள்ளார்.
இதுவரை இந்நோய் தாக்குதிலிற்குள்ளான 182 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர் என்றுக் கூறிய ரவாத், மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்ட மேலும் 31 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜப்பானிஸ் என்சிஃபாலிட்டிஸ் என்று குறிப்பிடப்படும் இந்த வகை மூளை வீக்க நோயால் இதுவரை 2,612 பேர் பாதிக்கப்பட்டு உ.பி.யின் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் 441 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் ரவாத் கூறியுள்ளார்.