இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் இறப்பு

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சர்வதேச அமைப்பான `குழந்தைகள் பாதுகாப்பு அறக்கட்டளை' (International charity Save The Children) வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் 60 விழுக்காடு குழந்தைகள் பிறந்து 28 நாட்களுக்குள் உயிரிழப்பதாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது.

டயரியா, நிமோனியா, மலேரியா, போன்ற குணப்படுத்தக் கூடிய நோய்களின் பாதிப்பினாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுவது கவலையளிக்கக்கூடியது என்று அந்த தகவல் கூறுகிறது.

வரும் 2015ஆம் ஆண்டிற்குள் தற்போதுள்ள குழந்தைகள் உயிரிழப்பு எண்ணிக்கையை மூன்றில் 2 பங்காகக் குறைக்க இந்திய அரசு உறுதியேற்க வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்துவதில், பங்களாதேஷ் வெற்றியடைந்திருப்பதாகவும், இந்தியாவைப் பொருத்தவரை பின்தங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்