கவர்ச்சியான குரலைக் கொண்டவரா?

வெள்ளி, 18 ஜூலை 2008 (20:56 IST)
ஒருவர் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டவரா என்பதை அறிய, அவரது உருவத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதை அனைவரும் அறிவோம். ஆனால் ஒருவரின் குரல் கவர்ச்சியானதாக இருந்தாலே சம்பந்தப்பட்ட நபர் அதிக பாலுணர்வைக் கொண்டிருப்பார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பெல்சில்வேனியாவில் உள்ள Albright College in Reading-ஐச் சேர்ந்த சூசன் ஹியூகஸ் தலைமையில் மனோதத்துவ நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

கவர்ச்சியான அல்லது செக்ஸியான குரல்வளத்தைக் கொண்டவர்கள் ஏறக்குறைய அவர்களின் உருவத்திலும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருப்பதுடன், பாலுறவு உணர்ச்சியும் அதிகம் கொண்டிருப்பார்கள் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு மனிதனின் குரலில் இருந்தே அவரது உயிரியல் ரீதியான தகவல்கள் வெளிப்படுகின்றன என்று ஹியூகஸை மேற்கோள்காட்டி அறிக்கை தெரிவிக்கிறது.

அதேநேரத்தில் கவர்ச்சிகரமான குரலைக் கொண்டிருப்பதாலேயே அவரின் முகம் கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும் என்பதில்லையாம்.

மரபியல்ரீதியில் ஒருவரின் குரல் நல்ல வளத்துடன் இருந்தால், அவர்கள் வாழ்க்கைத் துணையை தேர்வு செய்கையில் அதனை ஒரு முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.

என்றாலும் சில நேரங்களில் குரலை வைத்து, அறியும் கணிப்பு மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100 பேரின் குரல்களை பதிவு செய்து அவற்றின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து சூசன் அறிக்கையை வெளியிட்டுள்ளார். குரல் இனிமைக்கும் சம்பந்தப்பட்டவரின் குரலில் உச்சம், அதிர்வு போன்றவற்றிற்கும் பொதுவான தன்மை ஏதுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்