பொதுவாக குழந்தைகளின் உடலளவிலான விளையாட்டு நடவடிக்கைகள் குறைந்து வருவதாகத் தெரியவந்துள்ளது.
15 வயதான சிறுவர்களிடம் உடல்தகுதி நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மூன்றில் ஒரு மடங்கு குறைவாகவே உள்ளதாக கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.
குழந்தைகளில் தொடங்கி விடலைப்பருவத்தினராக அவர்கள் வளர்வது வரையிலான உடற்பயிற்சி என்பது, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் தொடர்புடையதாகும்.
நிபுணர்களின் கருத்துப்படி குழந்தைகள் குறைந்தது 60 நிமிடம் அதாவது ஒரு மணி நேரமாவது மிதமானது முதல் தீவிரமானது வரையிலான உடற்பயிற்சி நடவடிக்கைகளை கடைபிடித்தல் வேண்டும் என்று தெரியவருகிறது. ஆனால் எத்தனை இளைஞர்கள் இந்த உடற்பயிற்சியை மேற்கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை.
கடந்த 2000 - 2006ம் ஆண்டு வரை சுமார் 10 பூகோளப்பகுதியில் அடங்கிய ஆயிரத்து 32 குழந்தைகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தைகள் அனைவரும் 9 வயது முதல் 15 வயது வரையுள்ளவர்களிடமே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அந்தக் குழந்தைகளில் ஏறக்குறைய பாதியளவுக்கு ஆண் மற்றும் பாதியளவுக்கு பெண் குழந்தைகள். அவர்களின் செயல்பாடுகள் நிமிடத்திற்கு நிமிடம் கண்காணிக்கப்பட்டது.
9 வயது துவக்கத்தில் 3 மணி நேரம் தீவிரமாக விளையாடும் குழந்தைகள், 15 வயது நிரம்பியதும் அன்றாடம் 45 நிமிடமும், வாரயிறுதி நாளில் 35 நிமிடமும் மட்டுமே விளையாட்டிற்காக செலவிடுகிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஆண் குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகள் மிகவும் குறைவான நேரமே விளையாடுகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.