கோடை‌க்கே‌ற்ற மாது‌ள‌ம் பழ‌ம்

வியாழன், 22 ஏப்ரல் 2010 (13:03 IST)
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொட‌ர்‌ந்து ஏ‌ற்படு‌ம் விக்கல் உடனே நிற்கும். ஏதேனு‌ம் காரண‌த்‌தி‌னா‌ல் ‌நீ‌ர் அரு‌ந்தாம‌லோ, உட‌லி‌ல் ‌நீ‌ர்‌த்த‌ன்மை குறை‌ந்த அ‌திக தாக‌ம் எடு‌க்கு‌ம் போதோ மாதுள‌ம் பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடியாக தாக‌ம் த‌‌ணியு‌ம்.

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உட‌ல் குளிர்ச்சியடையும். கோடை‌க் கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் காய்ச்சலு‌க்கு‌ம் மாதுள‌ம் பழ‌ம் மரு‌ந்தாக அமையு‌ம்.

மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டு வர வே‌ண்டு‌ம். இ‌ப்படி ஒரு மாத கால‌ம் உ‌ட்கொ‌ண்டு வ‌ந்தா‌ல் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம்
உற்பத்தியாகு‌ம்.

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்