சரும பா‌தி‌ப்புகளை‌த் த‌வி‌ர்‌க்க

புதன், 31 மார்ச் 2010 (14:39 IST)
வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏ‌ற்படுவது‌ம் உ‌ண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை ம‌ற்று‌ம் ஏனைய ‌கீரை வகைகளை வார‌த்‌தி‌ல் 2 நா‌ட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

விய‌ர்வை அ‌திகமாக சுர‌ப்பதா‌ல் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடி‌நீரை அடிக்கடி குடி‌க்கவு‌ம்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உ‌ப்பு சே‌ர்‌த்து மோராக சாப்பிடுவது‌ம் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்