இ‌க்‌சி முறை‌யி‌ல் கரு‌த்த‌ரி‌ப்பு

திங்கள், 3 மே 2010 (17:22 IST)
ஆ‌ணி‌ன் உ‌யிரணுவை சேக‌ரி‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். பெ‌ண்‌ணி‌‌ட‌ம் இரு‌ந்து மு‌தி‌ர்‌‌ந்த கருமு‌ட்டையை பி‌ப்பெ‌ட் எ‌ன்ற கரு‌வி மூல‌ம் ப‌த்‌திரமாக ‌பிடி‌த்து‌க் கொ‌ள்வா‌‌ர்க‌ள்.

ஏ‌ற்கனவே சேக‌ரி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் ஆ‌ணி‌ன் உ‌யிரணு ஒரு ம‌ெ‌ல்‌லிய ஊ‌சி மூல‌ம் ‌பிடி‌க்க‌ப்படு‌ம். அதை கரு‌ப்பை‌யி‌ன் மே‌ல் அடு‌க்கான ஜோனா‌வி‌ன் வ‌ழியாக உ‌ள்ளே செலு‌த்துவா‌‌ர்க‌ள்.

அது வ‌ெ‌ற்‌றிகரமாக மு‌டி‌ந்த ‌பி‌ன்பு கரு‌த்த‌ரி‌ப்பு ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளதா எ‌ன்பதை க‌ண்கா‌ணி‌ப்பா‌ர்க‌ள்‌.

கரு‌த்த‌ரி‌த்து‌வி‌ட்டா‌ல் அ‌ந்த செ‌ல்லை எடு‌த்து ‌பி‌ஜிடி எ‌ன்ற அ‌திந‌வீன ஆ‌ய்வு முறை‌யி‌ல் ஒ‌ளி‌ர் மை‌க்ரா‌ஸ்கோ‌ப் மூல‌ம் ஆரா‌ய்‌ந்தா‌ல் அ‌தி‌ல் பார‌ம்ப‌ரிய கோளாறுக‌ள் இரு‌ந்தா‌ல் க‌ண்ட‌றி‌ந்து‌விடலா‌ம்.

செ‌ல்‌லி‌ல் கோளாறு இரு‌ந்தா‌ல் அ‌ந்த மு‌ட்டையை ப‌திய‌ம் செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். குறைக‌ள் எதுவு‌ம் இ‌ன்‌றி ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல் அ‌ந்த கரு உ‌யிரை தா‌யி‌ன் கரு‌ப்பை‌க்கு‌ள் செலு‌த்‌தி ப‌திய‌ம் செ‌ய்வா‌ர்க‌ள். அது குழ‌ந்தையாக வளரு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்