புதன், 28 ஏப்ரல் 2010 (13:21 IST)
தேவையானவை
பாசுமதி அரிசி - ஆழாக்கு
சர்க்கரை - 2 தேக்கரண்டி
உலர்ந்த திராட்சை, டூட்டி ஃப்ரூட்டி, - 2 தேக்கரண்டி
நெய் - 4 தேக்கரண்டி
கிராம்பு, சீரகம், ஏலக்காய்- சிறிது
பால் - முக்கால் கப்
பச்சை மிளகாய் - 2
செர்ரி - 10
பேரீட்சம் பழம் - 4
உப்பு -சிறிது
செய்யும் முறை
அரிசியைக் கழுவி அதில் சில சொட்டுகள் எண்ணெய் விட்டு 10 நிமிடம் ஊற விடவும்.
குக்கரில் அரிசியைக் கொட்டி பால், 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு முக்கால் வேக்காடாக வேக வைத்து இறக்கவும்.
அதை ஒரு தட்டில் கொட்டவும்.
வாணலி வைத்து நெய்யை ஊற்றி மசாலாப் பொருட்களைப் போட்டுத் தாளித்து அதில் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டவும்.
உலர்ந்த பழங்களை பொடியாக நறுக்கி சாதத்துடன் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் உடையாதபடி கலக்கவும்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான உணவாகவும், உடலுக்கு ஊட்டச்சத்து அளிப்பதாகவும் இருக்கும்.