வெள்ளி, 23 ஏப்ரல் 2010 (17:03 IST)
தேவையானவை
வேர்க்கடலை - 1 கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - 2 தேக்கரண்டி
எசன்ஸ் - சில சொட்டு
கேசரி பவுடர் - சிறிது
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
செய்யும் முறை
வறுத்த வேர்க்கடலையை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி சர்க்கரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்தும், எசன்ஸ், கேசரி பவுடர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியாக கடலையை சேர்த்துக் கிளறிக் கொண்டிருக்கவும்.
நன்கு சேர்ந்து வரும் போது இறக்கி நெய் தடவியப் பாத்திரத்தில் கொட்டி, துருவிய தேங்காயைத் தூவவும்.
சூடாக இருக்கும் போதே வில்லைகளாகப் போட்டுக் கொள்ளவும்.