வியாழன், 1 ஏப்ரல் 2010 (17:31 IST)
தேவையானவை
பால் - 2 லிட்டர்
முந்திரிப் பருப்பு - 20 கிராம்
குங்குமப்பூ - சிறிதளவு
சர்க்கரை - 300 கிராம்
சாரப் பருப்பு - 20 கிராம்
பச்சை கற்பூரம் - சிறிதளவு
செய்யும் முறை
கனத்த பாத்திரத்தில் பாலை வைத்து சிறு தீயில் காய்ச்சவும்.
பால் கொதித்து பாலாடை படியும். அதனை எடுத்த வைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு பாலாடை படிய படிய அதனை எடுத்து வைத்துக் கொண்டே இருக்கவும்.
பால் வற்றி வரும் போது பாலாடைகளை அதில் போட்டு சர்க்கரையை சேர்த்து ஒரு கிளறு கிளறி கொதிக்க விடவும்.
கடைசியாக வறுத்த முந்திரி, சாரப் பருப்பு, பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ சேர்த்து இறக்கி வைக்கவும்.
ஆறியவுடன் ப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.