வெள்ளி, 19 மார்ச் 2010 (15:12 IST)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி மாவு - 4 கப்
பழுத்த மாம்பழம் - 1
ஏலக்காய் பொடி - சிறிது
சர்க்கரை - 50 கிராம்
நெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
மாம்பழத்தைத் துண்டுகளாக்கி, அதோடு சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் சாறு போல அடித்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவைக் கொட்டி அதில் நெய் கலந்து, மாம்பழச் சாறும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
மாவை மாம்பழ வடிவத்தில் கொழுக்கட்டைகளாக செய்து கொள்ளவும்.
இவற்றை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடுக்கி, ஆவியில் வேகவைக்கவும்.
மாம்பழக் கொழுக்கட்டை தயார்.