கருப்பட்டி மோதகம்

திங்கள், 15 மார்ச் 2010 (12:22 IST)
தேவையானவை:

பச்சரிசி - 200 கிராம்
பொடியாக்கிய கருப்பட்டி - 50 கிராம்
துருவிய தேங்காய் - 1 க‌ப்
நெய் - ‌சி‌றிது
உப்பு - சிட்டிகை
ஏலக்காய் பொடி - ‌சி‌றிது

செய்முறை:

பச்சரிசியை நன்றாக ஊற வைத்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

பூரணத்‌தி‌ற்கு துரு‌விய தேங்காய், கருப்பட்டி, ஏலக்காய் கலந்து தயா‌ரி‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் நெய், உப்பு சேர்த்து, அரைத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கிளறவு‌ம். இளம் தீயில் கையில் ஒட்டாதபடி வதக்கவும்.

இப்படி வதக்கிய மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரிக்கு இடுவது போல வட்டங்களாக இட்டு, நடுவில் பூரணம் வைத்து மூடவும்.

உருண்டைகளாக இட்ட கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுங்கள்.

சுவையான கருப்பட்டி மோதகக் கொழுக்கட்டை தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்