பழ அல்வா

திங்கள், 26 அக்டோபர் 2009 (10:48 IST)
webdunia photo
WD
பழ‌ங்களை வை‌த்து அ‌ல்வா செ‌ய்து சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌‌விடவே மா‌ட்டீ‌ர்க‌ள். ‌‌வீ‌ட்டி‌ல் வகை வகையான பழ‌ங்க‌ள் ‌நிறைய இரு‌ந்தா‌ல் இதனை ‌மிகு‌ந்த சுவையாக‌ச் செ‌ய்யலா‌ம்.

தேவையான பொருட்கள்

ஆ‌ப்‌பி‌ள் - 1
ச‌ப்போ‌ட்டா - 2
திரா‌ட்டை - கொ‌ட்டை இ‌ல்லாதது (பு‌ளி‌ப்பு சுவையாக இரு‌க்க‌க் கூடாது)
பழு‌த்த மாம்பழம் - 1
பலா‌ப்பழ‌ச் சுளை - 10
வாழை‌யி‌ல் பூவம்பழம் ரக‌ம் - 4
சர்க்கரை - 1 க‌ப்
பால் - 2 க‌ப்
முந்திரி - 10
நெய் - 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை

பழங்களை‌க் கழு‌வி தோ‌ல் நீக்கிப் பொடியாக நறு‌க்‌கி ஒரு வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் போடு‌ங்க‌‌ள்.

இத்துடன் ஒரு க‌ப் பாலையும் அரை க‌ப் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனை அ‌ப்படியே அடு‌ப்‌பி‌ல் வை‌த்து ‌‌சிறு‌ந்‌தீ‌யி‌ல் ‌கிள‌றி ‌விடு‌ங்க‌ள்.

ம‌ற்றொரு அடு‌ப்‌பி‌ல் வாண‌லி வை‌த்து அ‌தி‌ல் 1 தே‌க்கர‌ண்டி நெ‌ய்‌வி‌ட்டு அ‌‌தி‌ல் மு‌ந்‌தி‌ரியை பொ‌ன்‌னிறமாக பொ‌ரி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

அத‌ற்கு‌ள் பழ‌க் கலவை அ‌ல்வா பத‌த்‌தி‌ற்கு வ‌ந்‌திரு‌க்கு‌ம். அத‌ன் சுவையை ரு‌சிபாரு‌ங்க‌ள். இ‌னி‌ப்பு குறைவாக இரு‌ந்தா‌ல் ‌சி‌றிது ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ச‌ரியாக இரு‌‌ந்தா‌ல் ஒரு தே‌க்கர‌ண்டி நெ‌ய்‌யை ‌வி‌ட்டு ‌‌கிள‌றி இற‌‌க்கவு‌ம்.

பி‌ன்‌ன‌ர் வறு‌த்த மு‌ந்‌தி‌ரியை‌த் ‌தூ‌வி ப‌ரிமாறவு‌ம்.

சுவையான பழ‌ அ‌ல்வா தயா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்