வேர்க்கடலை பிஸ்கட்

புதன், 10 ஜூன் 2009 (15:31 IST)
பிஸ்கட் விரும்பிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப வித்தியாசமான வகைகளிலும் பிளேவர்களிலும் செய்துக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை : 1 கப்
கோதுமை மாவு : 1 கப்
சர்க்கரை : 1 கப்
உப்பு : 1 தே‌க்கர‌ண்டி
சமையல் சோடா : 1 தே‌க்கர‌ண்டி
எசன்ஸ் : 1/2 தே‌க்கர‌ண்டி
நெய் : 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை:
வறுத்து, பொடித்த வேர்க்கடலை மற்றும் சர்க்கரை, கோதுமை மாவு அனைத்தையும் எடுத்துக்கொண்டு உப்பும், சமையல் சோடாவும் சே‌ர்‌த்து த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும்.

அடுத்து அந்த மாவை பூரி போல் உருட்டித் தட்டி, சிறிய வட்டமாக வெட்டி, அலங்கரிக்க ஊசியால் அதன் மேலே சிறு புள்ளிகளைக் குத்த வேண்டும்.

பிறகு ஒரு தட்டில் நன்றாக நெய் தடவி ஒன்றின் மேல் ஒன்று ஒட்டாதவாறு இடைவெளி விட்டுப் போட வேண்டும். ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் மணல் போட்டு மெல்லிய தட்டு போட்டு மூடி, நன்றாக ஆவி வரும் வரை ஓவனில் வைத்து பிஸ்கட் தட்டை வைத்து மூட வேண்டும். பதினைந்து நிமிட நேரத்துக்குள் அந்த பிஸ்கட்டை திருப்பி போட வேண்டும் (பிஸ்கட் பிரவுன் கலராக வரும் போது திருப்பவும்). வெந்ததும் எடுத்து ஆற வைத்துச் சாப்பிடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்