ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:15 IST)
கடையில் விற்கும் அல்வாவை வாங்கி ருசிப்பதை விட வீட்டிலேயே பூசணிக்காய் அல்வா செய்து ருசிப்பதில் எவ்வளவு ஆனந்தம் இருக்கும். அந்த ஆனந்தத்தை அடைய வேண்டாமா?
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
பூசணிக்காய் - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
பால் - 50 மி.லி
நெய் - 100 கிராம்
முந்திரி - 50 கிராம்
ஏலக்காய்
பச்சை கற்பூரம்
செய்யும் முறை
பூசணிக்காயைத் தோல் சீவித் துருவிக் கொள்ளவும்.
முந்திரியை உடைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
பால் நன்கு கொதிக்கும்போது பூசணிக்காயைப் போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.
பூசணிக்காய் பாதி வேகும் போது கொஞ்சம் கிளறிவிடவும்.
பூசணிக்காய் வெந்து குழைந்து வரும்போது தேவையான அளவிற்கு சர்க்கரையைப் போட்டு நன்கு கலக்கி விடவும்.
சர்க்கரையைப் போட்டதும் அடிபிடித்துக் கொள்ளும். எனவே அடிபிடிக்காமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி கிளற வேண்டும்.
அதனுடன் வறுத்த முந்திரி, பச்சைக் கற்பூரப் பொடி போட்டுக் கிளறி, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
சுவையான சுத்தமான பூசணிக்காய் அல்வா தயார். வீட்டில் இருப்பவர்களுக்குக் கொடுத்து பாராட்டு மழையில் நனையுங்கள்.