மு‌ட்டை பரோ‌ட்டா

திங்கள், 26 ஏப்ரல் 2010 (17:07 IST)
தேவையானவை

மைதா - 2 க‌ப்
மு‌ட்டை - 1
பே‌க்‌கி‌ங் பவுட‌ர் - அரை தே‌க்கர‌ண்டி
ச‌ர்‌க்கரை - 1 தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - தேவையான அளவு
எ‌ண்ணெ‌ய் - 2 தே‌க்கர‌ண்டி

செ‌ய்யு‌ம் முறை

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மைதா மாவுட‌ன் உ‌ப்பு, பே‌க்‌கி‌ங் பவுட‌ர், ச‌ர்‌க்கரை‌ப் போ‌ட்டு ந‌ன்கு கல‌க்கவு‌ம்.

பிறகு மா‌வி‌ற்கு நடு‌வி‌ல் ஒரு கு‌ழியை ஏ‌ற்படு‌த்‌தி, அ‌தி‌ல் மு‌ட்டையை உடை‌த்து ஊ‌ற்றவு‌ம். ‌

மாவை‌க் கைகளா‌ல் ந‌ன்கு ‌பிசை‌ந்து ‌கிளறவு‌ம். தேவையான அளவு த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி ‌மாவை ‌மிருதுவாக ‌பிசை‌ந்து வை‌க்கவு‌ம்.

பிசை‌ந்த மா‌வி‌ன் ‌மீது எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி 2 ம‌ணி நேர‌ம் ஊற ‌விடவு‌ம்.

ஊ‌றிய மா‌வினை ‌சி‌றிய உரு‌ண்டைகளாக உரு‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். உரு‌ண்டைகளை ம‌ெ‌ல்‌லிய ச‌ப்பா‌த்‌திகளாக இ‌ட்டு அத‌‌ன் ‌மீது நெ‌ய்யை தடவை ச‌ப்பா‌த்‌தியை உரு‌ட்டி ‌மீ‌ண்டு‌ம் உருளையா‌க்‌கி அதனை பரோ‌ட்டாவாக ‌திர‌ட்டவு‌ம்.

தோசை‌க் க‌ல்‌லி‌‌ல் பரோ‌ட்டாவை‌ப் போ‌ட்டு இர‌ண்டு ப‌க்கமு‌ம் ‌சிவ‌க்குமாறு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி எடு‌க்கவு‌ம்.

இ‌த‌ன் சுவை புதுமையாக இரு‌க்கு‌ம். செ‌ய்து சுவை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

வெப்துனியாவைப் படிக்கவும்