சிக்கன் பிரியாணி

Webdunia

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (17:01 IST)
webdunia photoWD
அசைவத்தில் எல்லோரும் எளிதாக வீட்டில் சமைத்து ருசிக்க சிக்கன் பிரியாணி ஏற்ற உணவு.

தேவையான பொருட்கள

கோழிக்கறி - 1/2 கிலோ
அரிசி - 1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி - 8
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி 1/2 கிலோ
பூண்டு
இஞ்சி
புதினா
கொத்தமல்லி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
உப்பு
பச்சைமிளகாய்
பிரிஞ்சி இலை
மஞ்சள்தூள்

சிக்கன் பிரியான செய்யும் முற

குக்கரில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும்அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

சுத்தம் செய்த கோழிக்கறியை அதில் போட்டு தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது தேவையான தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்கவிட்டு, பின்பு கழுவி சுத்தம் செய்த அரிசியை அதில் போட்டு குக்கரை மூடவும்.

உங்கள் குக்கரில் அரிசி முக்கால் பாகம் வேகும் அளவிற்கு நேரத்தை கணித்துக் கொள்ளவும்.

அரிசி முக்கால் பாகம் வெந்ததும் குக்கரை திறந்து கிளறி, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும், வறுத்த முந்திரியை சேர்க்கவும்.

பிரியாணியின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கொத்துமல்லி தழைகளையும் தூவி அலங்கரித்து பரிமாறவும். இணையாக தயிர்-வெங்கயா பச்சடியை சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

பிரியாணிக்கு நிறம் தேவையெனில் மசாலாவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நிறம் கலந்த அரிசி ஆங்காங்கே இருக்க வேண்டுமென்றால், கேசரிப் பொடியை தண்ணீரில் கலந்து அதை குக்கரை திறந்ததும் ஒரே இடத்தில் ஊற்றி பின் கிளறவும்.

சாதம் நன்கு உதிரி உதிரியாக வர ஊற வைக்கும் அரிசியில் சிறிது எண்ணெய் விட்டு ஊற வைக்கவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்