கறி சாப்ஸ்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக இந்த கறி சாப்ஸ் அமையும்.

தேவையான பொருட்கள

எலும்பில்லாத கறி - 400 கிராம

மிளகு - 25 கிராம

பட்டை - 30 கிராம

கிராம்பு - 10 கிராம

நெய் - 100 கிராம

செய்முற

முதலில் கறியை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி நீரில் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மிளகு, பட்டை, கிராம்பு இவைகளை அம்மியில் வைத்து தேவையான உப்பையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து கழுவி வைத்திருக்கும் கறியுடன் சேர்த்து கிளறி சுமார்அரை மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட வேண்டும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை விட்டு நன்றாகக் காய்ந்தவுடன் பிசிறி வைத்திருக்கும் கறியை எடுத்து அதில் போட்டு கறி நன்றாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருந்து கறி வெந்தபின் இறக்கி விடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்