மட்டன் கட்லெட்

வீட்டில் உள்ளவர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டன் கட்லெட் தயாரித்துக் கொடுத்து பாராட்டு வாங்குங்கள்.

தேவையான பொருட்கள்:

துண்டாக்கப்பட்ட மட்டன் 1/4 கிலோ
உருளை கிழங்கு 100 கிராம்
இஞ்சி சிறு துண்டு
வெங்காயம் 4 (பொடிப் பொடியாக நறுக்கியது)
தக்காளி 2
பூண்டு 4 முதல் 8 பல்
மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
ரொட்டி தூள் 50 கிராம்
எண்ணெய் தேவையான அளவு
முட்டை 2 (நன்கு நுரைக்க அடித்து வைத்துக் கொள்ளவும்)

செய்முறை :

துண்டிக்கப்பட்ட கறியை நன்கு சுத்தமாக்கவும்.


சுத்தம் செய்த கறியை, தேவையான உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளுடன் பிரஷர் குக்கரில் 10 நிமிடம் வேக வைக்கவும்.


உருளை கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.


நறுக்கிய வெங்காயத்தை, கரம் மசாலா தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுதுடன் வதக்கவும்.


வதக்கிய வெங்காயத்துடன், மசித்த உருளைக்கிழங்கையும் வெந்த மட்டனையும் சேர்க்கவும்.


5 நிமிடம் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கவும்.


அடுப்பிலிருந்து இறக்கியவுடன், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேவையான வடிவத்தில் ஆக்கிக் கொள்ளவும்.


அதை நன்கு அடித்து வைத்துக் கொண்டிருக்கும் முட்டையில் முக்கி, ரொட்டி தூளில் பிரட்டி தோசை கல்லில் போட்டு, இரண்டு பக்கமும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

மட்டன் கட்லெட் தயார்!!!

வெப்துனியாவைப் படிக்கவும்