கொத்துகறி உருண்டைக் குழம்பு

Webdunia

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (16:59 IST)
கொத்துகறியை வாங்கி வந்து அதில் உருண்டைக் குழம்பு வைத்துப் பாருங்கள்.

உருண்டை செய்

துவரம் பருப்பு-1 கப
ஊளுத்தம் பருப்பு-1/4 கப
(சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.)

வேகவைத்த கைமா-1 கப் (நன்கு ப்ரஷர் குக்கரில் உப்பு போட்டு வேக வைத்தது)

விழுதாக அரைக்கவும

காய்ந்த மிளகாய்-6-8
சீரகம்-2 டீஸ்பூன
இஞ்சி-1 பெரிய துண்ட

உருண்டை, கிரேவி இரண்டுக்கும

பூண்டு-10 பல
சின்ன வெங்காயம்-1 கப

கிரேவி செய்

உப்பு-தேவையான அளவ
தக்காளி-1/4 கில
மிளகாய் பொடி-4-5 டீஸ்பூன
கறிவேப்பிலை-1 பிடி
புளி-1 எலுமிச்சை அளவ

தாளிக்

எண்ணெய்-1/4 கப
1 டீஸ்பூன் கடுகு
1/2 டீஸ்பூன் வெந்தயம்
4 காய்ந்த மிளகாய
கறிவேப்பிலை முதலியவ
4 பட்ட
2 லவங்கம்.

உருண்டை தயாரிக்க செய்முற

இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய் முதலியவைகளை மைய அரைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்பு, அரைத்த விழுது முதலியன சேர்த்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்க்கவும். பின் கொத்துகறியையும் சேர்த்து, உருண்டைகளாகப் பிடித்து, ஆவியில் வைத்து எடுக்கவும்.

க்ரேவி செய்முற

ஒரு கடாயை (வாணலியை) அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை முதலியவை போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்ததும், சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின், தக்காளி, மஞ்சள் பொடி, காரப் பொடி போட்டு வதக்கவும். இப்போது புளிக்கரைசல், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீரும் விட்டுக் கொதித்த பின் தயாராக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு கொதிக்க விடவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்