கொண்டைக்கடலை சுண்டல்

வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (17:31 IST)
தேவையான பொரு‌ட்க‌ள்

கொண்டைக்கடலை - 1 க‌ப்
மிளகாய் வற்றல் - 2
தேங்காய் துருவல் - 1 கப்
கடுகு, ‌சீரக‌ம், உளுத்தம்பருப்பு - தா‌ளி‌க்க
உப்பு - தேவையானது
பெருங்காயம் - 1/2 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - தாளிக்க

செ‌ய்யு‌ம் முறை

மூ‌க்கடலை‌யி‌ல் இர‌ண்டு வகை உ‌ண்டு. ஒ‌ன்று கரு‌ப்பு‌க் கடலை, ம‌ற்றொ‌ன்று வெ‌ள்ளை‌க் கடலை. இ‌தி‌ல் எ‌ந்த‌க் கடலையை வே‌ண்டுமானாலு‌ம் பய‌ன்படு‌த்தலா‌ம்.

ஒரு ‌க‌ப் கடலையை முதல் நாள் இரவே த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற வைத்துக் கொள்ளவும்.

அவசர‌த்‌தி‌ற்கு வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

குக்கரில், கொண்டைக்கடலையை தேவையான அளவு உப்பு சேர்த்து த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு வேக வைத்து‌க் கொ‌ள்ளவு‌ம். ந‌ன்கு வெ‌ந்து இரு‌ப்பது சுவையை‌க் கூ‌ட்டு‌ம்.

தண்ணீரை வடித்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, ‌சீரக‌ம், உளுந்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து தா‌ளி‌த்து கடலையில் கொட்டி கிளறவும்.

பின்பு தேங்காயைச் சேர்த்து கிளறி பறிமாறவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்