அது என்னடா கார்ன்பிளாக்ஸ் கிச்சடி என்று யோசிக்கின்றீர்களா? சும்மா செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள் :
கார்ன்ஃப்ளாக்ஸ் - 2 கப் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) கேரட் - 1 (துருவியது) முட்டைக்கோஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது) பச்சைப் பட்டாணி - ஒரு கைப்பிடி இஞ்சி - 1 சிறிய துண்டு பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) கடுகு - 2 தேக்கரண்டி உ. பருப்பு - 2 தேக்கரண்டி க.பருப்பு - 2 தேக்கரண்டி முந்திரி பருப்பு - 6 மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தாளிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை :
கார்ன்ஃப்ளாக்ஸை சூடான வாணலியில் லேசாக வறுத்து எடுக்கவும். பிறகு அதே வாணலியில் எண்ணெய் விட்டு முந்திரிப் பருப்பை வறுத்து எடுக்கவும்.
பின்னர் வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து விடவும். பிறகு அதில் இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை போடவும்.
பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அத்துடன் எல்லாக் காய்கறிகளையும் போட்டு வதக்கவும். அதில் உப்பு, மஞ்சள் பொடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும். காய்கறிகள் வெந்ததும் கார்ன்ஃப்ளாக்ஸ் போட்டுச் சிறிது வெந்நீர் தெளித்து இரண்டு, மூன்று நிமிடங்கள் மூடிவைத்து வேக விடவும்.
வாணலியை கீழே இறக்கி கார்ன்ஃப்ளாக்ஸ் உப்புமா மீது முந்திரிப் பருப்பைத் தூவவும்.
இந்த உப்புமாவை தக்காளி சாஸ், சட்னி என எது வேண்டுமானாலும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். கார்ன்ஃப்ளாக்ஸைப் பாலில் போட்டு சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு இது ஒரு சுவையான, சத்தான மாலை உணவாகும்.