வெண்டைக்காய் பகோடா செய்வது மிகவும் எளிது. ஆனால் ஒரு முறை ருசித்துவிட்டீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் செய்வீர்கள். அதற்கான குறிப்பு இதோ.
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் - 1/4 கிலோ நல்லெண்ணெய் - பொறிப்பதற்கு
கலவை தயாரிக்க :
கடலை மாவு - 2 மேஜைக்கரண்டி அரிசி மாவு - 1 மேஜைக்கரண்டி மக்காச்சோள மாவு - 1 மேஜைக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி மிளகாய்த் தூள் - ¾ தேக்கரண்டி அஜினோ-மோட்டோ - 1/4 தேக்கரண்டி
செய்முறை :
webdunia photo
WD
வெண்டைக்காயை கழுவித் துடைத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மக்காச்சோள மாவுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய்த் தூள், அஜின மோட்டா ஆகியவற்றைச் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கலந்து கொள்ளவும்.
நறுக்கிய வெண்டைக்காயுடன் கலந்து வைத்த மாவை அதன் மேல் தூவி பிசறி விடவும்.
ஒரு வாணலியில் நல்லெண்ணெயை சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் நெல்லிக்காயளவு புளியை அதில் போட்டு நன்றாக கருப்பாக பொரிந்ததும் எடுத்து விடவும்.
பிறகு கலவையுடன் சேர்த்து வைத்திருக்கும் வெண்டைக்காயை கைகளால் எடுத்து பகோடா போல உதிரியாக எண்ணெயில் தூவவும்.
தீயை குறைவாக வைத்து நன்கு வேகும் வரை காத்திருந்து பிறகு திருப்பிப் போடவும். பொன்னிறமானதும் எடுத்துவிடவும்.
எண்ணெய் உறிஞ்சும் பேப்பரில் வைத்து எண்ணெய் உறிஞ்சியப் பிறகு பரிமாறலாம்.