கலப்பு துவையல்

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (15:26 IST)
காலை உண‌வி‌ற்கு இ‌ந்த கலப்பு துவையல் செய்து பாருங்கள். அத‌ற்கு ரசிகர் மன்றமே வைத்து விடுவீர்கள்.

தேவையானப் பொருட்கள்

வெங்காயம் - 2
தக்காளி - 2
தேங்காய் - 2 பத்தை
கடலைப் பருப்பு - 1/4 கப்
உளுந்தப் பருப்பு - 1/4 கப்
புளி
காய்ந்த மிளகாய் - 4
கருவேப்பிலை, கொத்துமல்லி
உப்பு

செ‌ய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு மற்றும் உளுந்தப் பருப்பை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.

அதனை தட்டில் கொட்டிக் கொண்டு பின்னர் அதிலேயே பெரிது பெரிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும்.

அதையும் தட்டில் வைத்துக் கொண்டு அரைப்பதற்கு ஏற்ற வகையிலான தேங்காயையும் வதக்கிக் கொள்ளவும்.

அதை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் விட்டு 4 மிளகாய்களையும் போட்டு வறுத்துக் கொள்ளவும்.

பின்னர் மிக்சி அல்லது அம்மியில் முதலில் தேங்காயை அரைக்கவும்.

அதில் வறுத்து வைத்திருக்கும் பருப்புகளையும் கொட்டி அரைக்கவும். அதன் பின்னர் தக்காளி, வெங்காய வதக்கல்கள், கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், புளி, உப்பு, கருவேப்பிலை, கொத்துமல்லிகளைப் போட்டு அரைத்து எடுக்கவும்.

இதனை துவையலாகவும் பயன்படுத்தலாம். இட்லி, தோசைக்கு சட்னியாகவும் பயன்படுத்தலாம். உங்கள் விருப்பம்.

வெப்துனியாவைப் படிக்கவும்